ஐ.நா. பெண்கள் உரிமை அமைப்பில் இருந்து ஈரான் நீக்கம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா


ஐ.நா. பெண்கள் உரிமை அமைப்பில் இருந்து ஈரான் நீக்கம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா
x

ஈரானுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியா உள்பட 16 நாடுகள் வாக்களிக்கவில்லை.

ஜெனீவா,

ஐ.நா. சபையின் பெண்கள் உரிமைக்கான அமைப்பிலிருந்து ஈரானை நீக்கும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் போராட்டங்களின் போது பெண்கள் மீதான மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 8 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்பட மொத்தம் 16 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐ.நா.வின் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்பட்டுள்ளது.


Next Story