இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ஜெலன்ஸ்கி...? இங்கிலாந்து, ஜெர்மனியின் பீரங்கிகள் துருப்பிடித்தவை என தகவல்


இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ஜெலன்ஸ்கி...? இங்கிலாந்து, ஜெர்மனியின் பீரங்கிகள் துருப்பிடித்தவை என தகவல்
x

போரில் சிக்கிய உக்ரைனுக்கு அளிக்க இருந்த பீரங்கிகளை ஆய்வு செய்ததில், அவற்றின் முக்கிய பாகங்கள் செயல்படாத நிலையில் இருந்தது தெரிய வந்து உள்ளது.



லண்டன்,


உக்ரைனுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ரஷியா போரை தொடங்கியது. ஓராண்டை நெருங்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. எனினும், போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைனை பலவீனமடைய செய்யும் நோக்கில், கடந்த அக்டோபரில் இருந்து அந்நாட்டின் ஆற்றல் கட்டமைப்பு பகுதிகளை இலக்காக கொண்டு, அடுக்கடுக்காக ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்கள், போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஜெர்மனியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த முனிச் மாநாட்டின் ஒரு பகுதியாக பேசும்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

உக்ரைன் கோரிக்கையை ஏற்று, மேற்கத்திய நாடுகளும் ஆயுதங்களை வினியோகிக்க முன்வந்துள்ளன. உக்ரைனுக்கு நவீன ரக பெரிய பீரங்கிகளை அளிக்க மேற்கத்திய நாடுகள் உறுதி அளித்தன.

ஆனால், அந்த ஆயுத தளவாடங்களில் முக்கிய பகுதிகள் எந்த போருக்கும் பயன்படாதவை என தற்போத தெரிய வந்து உள்ளது என இங்கிலாந்து பாதுகாப்பு மந்திரி பென் வாலாஸ் கூறியுள்ளார்.

இதுபற்றி ஜெர்மனியில் இருந்து வெளிவரும் டெர் ஸ்பீகல் என்ற வலைதள செய்தி ஊடகத்திற்கு வாலாஸ் அளித்த பேட்டியில், பீரங்கிகளை வினியோகிப்பது பற்றி நேட்டோ நட்பு நாடுகளுடன் ஜெர்மனி கூட்டம் ஒன்றை நடத்தியது.

ஆனால், அதில் சில பிரச்சனைகள் தெரிய வந்தன. அரசியல் முடிவு எடுக்கப்பட்டு விட்டது. அரசியல்வாதிகள் தங்களது ராணுவ வீரர்களை டெப்போவுக்கு அனுப்பி உள்ளனர்.

அவர்கள் சென்ற பின்னரே, பீரங்கிகள் செயல்பாட்டுக்கு உரியவை அல்ல என்பதும் அல்லது அவை உக்ரைனுக்கு அளிக்க முடியாத வகையில், பழுதடைந்து உள்ளது என தெரிய வந்தது என கூறியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக நமது ராணுவம் செயலிழந்து விட்டது என்ற வேதனை தரும் உண்மையை நேட்டோ நாடுகள் எதிர்கொண்டே ஆக வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பீரங்கிகள் உள்ளன என எண்ணி விடலாம்.

ஆனால், அவற்றில் ஒரு சிலவே பயன்படத்தக்க வகையில் உள்ளன என்ற உண்மையும் உள்ளது என கூறிய இங்கிலாந்து மந்திரி, மற்ற நட்பு நாடுகளிடம் கேட்டு பார்க்க சற்று கூடுதல் நேரம் வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் ஒன்றும் போரில் உடனடியாக வெல்ல கூடிய வகையிலான வெள்ளி தோட்டாக்களை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால், உக்ரைனுக்கு இக்கட்டான தருணத்தில் பீரங்கிகள் சரியாக சென்றடைவதற்கான கேள்விக்கு விடை தெரியாமல் உள்ளது.

எனினும், வாலாஸ் விட்டு கொடுக்காமல் பேசும்போது, இந்த ஆயுதங்களை எல்லாம் கையாள, உக்ரைன் படைகளுக்கு போதிய பயிற்சிகள் தேவை என்பதும் முக்கியம் என வலியுறுத்தி உள்ளார்.

உக்ரைனுக்கு போரில் உதவ இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் முன்வந்தன. அவை முறையே, சேலஞ்சர் 2, லெப்பர்டு 2 மற்றும் எம்1 ஆப்ராம்ஸ் பீரங்கிகளை வழங்க ஒப்புதல் அளித்தன.

அதனுடன் இல்லாமல், ரஷியா ஒன்றும் கி.மீ. கணக்கில் முன்னேறி விடவில்லை. ஒரு சில மீட்டர்களே போரில் முன்னேறி உள்ளது என்றும் வாலாஸ் கூறியுள்ளார். ரஷியர்கள் அனைத்து நிலைகளிலும் முன்னேறி உள்ளனர் என நாம் பார்க்கும்போது, அவர்களில் பல ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்தே அதனை பெற்றுள்ளனர் என்பதும் கவனிக்க வேண்டும் என வாலாஸ் பெருமையாக கூறியுள்ளார்.


Next Story