ஹமாஸை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார் - இஸ்ரேல்


ஹமாஸை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார்  - இஸ்ரேல்
x

காசாவின் மக்கள் தொகையில் 90 சதவிகிதத்தினர் இடப்பெயர்வுக்கு ஆளாகி இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

ஜெருசலம்,

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களாகத் தொடர்ந்துவரும் நிலையில், ஹமாஸை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அக்.7 ஹமாஸ் இஸ்ரேலில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகினர். 240 பேரை பிணைக்கைதிகளாகக் கடத்தி சென்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது வான்வழி தாக்குதலைத் தொடங்கி தரைவழி தாக்குதலாக விரிவுப்படுத்தி உள்ளது. இதில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 17,700-ஐ கடந்துள்ளதாகவும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவின் மக்கள் தொகையில் 90 சதவிகிதத்தினர் இடப்பெயர்வுக்கு ஆளாகி இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.


Next Story