அமெரிக்காவில் ராகுல் பேசும்போது குறுக்கிட்டு கோஷம் எழுப்பிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் - பரபரப்பு


அமெரிக்காவில் ராகுல் பேசும்போது குறுக்கிட்டு கோஷம் எழுப்பிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் - பரபரப்பு
x

அமெரிக்காவில் ராகுல்காந்தி பேசும் போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறுக்கிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாஷிங்டன்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று கலிபோர்னியா மாகாணத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பேசிக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பினர். 1984ம் ஆண்டு சீக்கிய கலவரம் தொடர்பாகவும், ராகுல்காந்தியின் பாட்டியான முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனால் நிகழ்ச்சி தடைபட்ட நிலையில் தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, வருக வருக... காங்கிரசை பொறுத்தவரை நாங்கள் அனைவர் மீதும் அன்பு வைத்துள்ளோம். யாரேனும் எதாவது கூற நினைத்தால் அதை அவர்கள் எந்த தடையும் இன்றி கூறலாம். அதை கேட்க நாங்கள் தயாராக உள்ளோம். நாங்கள் கோபப்படப்போவதில்லை, ஆக்ரோஷப்படப்போவதில்லை. நாங்கள் அவர்களின் பேச்சை கேட்போம். அன்பு செலுத்துவோம். ஏனென்றால் இது தான் எங்கள் வழக்கம்' என்றார்.




Next Story