இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை - இலங்கை தொடங்கியது


இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை - இலங்கை தொடங்கியது
x

கோப்புப்படம்

இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இலங்கை தொடங்கியது

கொழும்பு,

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பெருமளவில் கடன் வழங்கி இருக்கின்றன. அதேநேரம் சர்வதேச நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு அந்த நாடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் வெளிநாடுகளிடம் இருந்து பெற்றுள்ள கடன்களை மறுசீரமைத்தால் மட்டுமே இலங்கைக்கு சர்வதேச நிதியத்தின் கடன் உதவி கிடைக்கும்.

எனவே இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இதற்காக லசார்டு என்ற வெளிநாட்டு கடன் ஆலோசனை நிறுவனத்தை இலங்கை தேர்ந்தெடுத்து உள்ளது.

இந்த நிறுவனம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான இருதரப்பு மற்றும் பிற கடன் வழங்குனர்களின் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளது.


Next Story