பாகிஸ்தான்: அணையில் மூழ்கிய 2 மகன்களை காப்பாற்ற முயன்ற நீதிபதி உள்பட 4 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தான்: அணையில் மூழ்கிய 2 மகன்களை காப்பாற்ற முயன்ற நீதிபதி உள்பட 4 பேர் உயிரிழப்பு
x

ராஜா காலித் அணையில் மூழ்கிய தனது 2 மகன்களை காப்பாற்ற முயன்ற நீதிபதி மற்றும் அவரது உறவினர் ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் ஜீலம் நகரில் ராஜா காலித் அணை உள்ளது. விடுமுறையை முன்னிட்டு பொழுதுபோக்குவதற்காக இங்கு ஏராளமானோர் குடும்பத்துடன் சென்றிருந்தனர்.

அதன்படி அங்குள்ள நீதிபதி ஒருவரும் தனது 2 மகன்கள் மற்றும் மைத்துனருடன் அணைக்கு குளிக்க சென்றார். அணையில் குளித்து கொண்டிருந்தபோது அந்த 2 சிறுவர்களும் நீரில் தத்தளித்தனர். இதனையடுத்து அவர்களை காப்பாற்றுவதற்காக நீதிபதியும், அவரது உறவினரும் முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு சென்று அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகன்களை காப்பாற்ற முயன்றபோது நீதிபதியும் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story