பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிடிவாரண்டு


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிடிவாரண்டு
x

கோப்புப்படம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இம்ரான் கான் இருந்தார். பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த அவரின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். இதனை கண்டித்து தன் ஆதரவாளர்களுடன் இணைந்து நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் இம்ரான்கான் மீது ஊழல், பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குகள் பதிந்து விசாரணை நடக்கிறது.

கடந்த மாதம் இதுகுறித்தான வழக்கில் கோர்ட்டில் ஆஜராக இம்ரான்கானுக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது அவரை சுற்றிவளைத்து ராணுவவீரர்கள் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று இம்ரான்கான் உள்ளிட்ட அவரது கட்சி தலைவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கோர்ட்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னாள் விமான போக்குவரத்து மந்திரி குலாம் சர்வாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story