இங்கிலாந்தில் உச்சமடையும் வெப்பம்... ஆறு, குளங்கள் வற்றும் அபாயம்: சுற்றுச்சூழல் அமைச்சகம் எச்சரிக்கை !


இங்கிலாந்தில் உச்சமடையும் வெப்பம்... ஆறு, குளங்கள் வற்றும் அபாயம்: சுற்றுச்சூழல் அமைச்சகம் எச்சரிக்கை !
x

இங்கிலாந்தில் தற்போது அதீத வெப்பமும், வறண்ட காலநிலையும் நிலவி வருகிறது.

லண்டன்,

இங்கிலாந்தில் தற்போது அதீத வெப்பமும், வறண்ட காலநிலையும் நிலவி வருகிறது. மேலும், போதுமான அளவு மழையும் பெய்யவில்லை. இதே நிலை தொடரும் நிலையில், இங்கிலாந்தில் சில பகுதிகள் வறட்சியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் அதிக வெப்பநிலை தொடர்ந்து நிலவிவருவதால், புற்கள் பழுப்பு நிறத்தில் கானப்படுகின்றன. ஆறுகளில் நீரோட்டம் குறைந்து கானப்படுகிறது. ஒரு சில குளங்கள் முற்றிலும் வற்றிய நிலையில் கானப்படுகிற்து.

இதுவரை இல்லாத அளவு கடந்தவாரம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எட்டியதால், ஏற்கெனவே வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருந்த பகுதிகள் தற்போது மோசமான நிலையை எட்டியுள்ளதாக இங்குள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story