இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அண்மைக்காலமாக நடந்த வன்முறைகளுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம்


இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அண்மைக்காலமாக நடந்த வன்முறைகளுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம்
x

கோப்புப்படம்

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அண்மைக்காலமாக நடந்த வன்முறைகளுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரோம்,

புனித பூமியில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் போது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அண்மைக்காலமாக வன்முறை அதிகரித்து வருவதற்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ரோமில் நிகழ்வு ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ், "இஸ்ரேல் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து நான் கவலை கொள்கிறேன். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

புனித பூமியான ஜெருசலேமிலிருந்து வரும் செய்திகள் என்னை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளன. எனினும், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மரணச் சுழல்கள் இரண்டு நாட்டு மக்களுக்கும் இடையே இருக்கும் சிறிய நம்பிக்கையைக் கொன்றுவிடவில்லை என நம்புகிறேன். இரண்டு நாட்டு அரசுகளும் நேரத்தை வீணடிக்காமல் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலின் போது ஒரு பெண் உட்பட 10 பேர் இறந்ததையும், வார இறுதியில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஜெப ஆலயத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டதையும் போப் பிரான்சிஸ் கண்டித்தார்.


Next Story