உள்நாட்டு பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த குவாட் நாடுகள் உறுதி


உள்நாட்டு பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த குவாட் நாடுகள் உறுதி
x

இந்தோ-பசுபிக் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்க குவாட் அமைப்பு முடிவு செய்துள்ளது.

டோக்கியோ,

இந்தியா, அமெரிக்கா, அஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஒன்றினைந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாகியுள்ளன. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று நடைபெற்றது.

இந்த உச்சிமாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றனர். குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்பது இது 2-வது முறையாகும். அதன்படி, இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் குறித்து 4 நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். அப்போது, இந்தோ-பசுபிக் பகுதியில் சுதந்திரமான, திறந்த நிலையிலான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நாடுகளின் இறையான்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கக்கூடியதின் முக்கியத்துவம் குறித்தும் தலைவர்கள் ஆலோசித்தனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் உள்கட்டமைப்பை மேம்படுத்த குவாட் அமைப்பு உறுதிபூண்டுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்த குவாட் நாடுகளின் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளனர் என மாநாட்டிற்கு பின் குவாட் அமைப்பு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story