"ரஷியா தற்போதைக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை" - அமெரிக்கா கருத்து

Image Courtesy : ANI
புதினின் மிரட்டல் குறித்த ஆபத்தை அமெரிக்க மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
ரஷிய அதிபர் புதினின் அணு ஆயுத மிரட்டல் தீவிரமானது எனவும், ஆனால் தற்போதைக்கு ரஷியா அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், புதினின் மிரட்டல் குறித்த ஆபத்தை அமெரிக்க மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும், ரஷியா இந்த இருண்ட பாதையில் இறங்கினால் அமெரிக்கா எத்தகைய தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்பது குறித்து ரஷியாவுடன் நேரடியாக விவாதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story






