உக்ரைனின் பிரம்மாண்ட அணையை தகர்க்க நினைக்கும் ரஷியா..?


உக்ரைனின் பிரம்மாண்ட அணையை தகர்க்க நினைக்கும் ரஷியா..?
x
தினத்தந்தி 22 Oct 2022 11:09 AM GMT (Updated: 2022-10-22T16:43:45+05:30)

அணையைத் தகர்ப்பது கெர்சன் பிராந்தியத்தின் பெரும்பகுதிக்கு பேரழிவு தரும் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

கீவ்,

பிரமாண்டமான நோவா ககோவ்கா அணைக்குள் ரஷ்யப் படை வெடிமருந்துகளை வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என தெரிவித்து அணையைத் தகர்க்க வேண்டாம் என்று ரஷ்யாவை எச்சரிக்குமாறு மேற்கு நாடுகளை அவர் வலியுறுத்தினார். 30 மீட்டர் உயரமும் 3.2 கிலோமீட்டர் நீளமும் கொண்ட இந்த அணை 1956 ஆம் ஆண்டு டினிப்ரோ ஆற்றின் மீது ககோவ்கா நீர்மின் நிலையத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது.

இது 2014ல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கும் மற்றும் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கும் தண்ணீரை வழங்கி வருகிறது.

இந்த அணையைத் தகர்ப்பது கெர்சன் பிராந்தியத்தின் பெரும்பகுதிக்கு பேரழிவு தரும் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். ஆனால் இந்த அணையை ஏவுகணை தாக்குதல் நடத்தி உக்ரைன் படை அழிக்க நினைப்பதாக ஏற்கனவே ரஷ்யா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.


Next Story