ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் மூழ்கிய கப்பல்


ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் மூழ்கிய கப்பல்
x
தினத்தந்தி 3 March 2024 2:30 AM IST (Updated: 3 March 2024 2:33 AM IST)
t-max-icont-min-icon

செங்கடலில் சென்று கொண்டிருந்த ரூபிமர் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

துபாய்,

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மாதம் 18-ந் தேதி ஏடன் வளைகுடா அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்த ரூபிமர் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்கினர். இதில் கப்பல் பலத்த சேதம் அடைந்தது. தாக்குதலை தொடர்ந்து மாலுமிகள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் கப்பல் அதே பகுதியில் தத்தளித்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் அந்த கப்பல் நேற்று கடலில் மூழ்கியது. இந்த தகவலை ஏமன் அரசு தெரிவித்தது.

1 More update

Next Story