இங்கிலாந்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் கத்திக்குத்து - காலிஸ்தான் ஆதரவாளர் கைது


இங்கிலாந்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் கத்திக்குத்து - காலிஸ்தான் ஆதரவாளர் கைது
x

Image Courtesy : AFP

கத்திக்குத்து சம்பவத்தில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க சீக்கிய வாலிபர் ஒருவர் திடீரென அங்கு வந்திருந்தவர்களை கத்தியால் குத்த ஆரம்பித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். எனினும் இதில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சுதந்திர தின நிகழ்ச்சியின்போது மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்க முயற்சிப்பதும், பொதுமக்கள் கலைந்து ஓடுவதும் போன்ற காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் காலிஸ்தான் ஆதரவாளரான குர்ப்ரீத் சிங் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story