தாய்லாந்து: ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரின் சிறை தண்டனை குறைப்பு


தாய்லாந்து: ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரின் சிறை தண்டனை குறைப்பு
x

சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக தக்சின் ஷினவத்ரா வெளிநாட்டுக்கு தப்பியோடினார்.

பாங்காங்,

தாய்லாந்தில் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த தக்சின் ஷினவத்ரா (வயது 74) ராணுவப்புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். பின்னர் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதுகுறித்த வழக்கு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக தக்சின் ஷினவத்ரா வெளிநாட்டுக்கு தப்பியோடினார். 15 ஆண்டுகள் வெளிநாடுகளில் தலைமறைவாகி இருந்த அவர் கடந்த வாரம் தாய்லாந்து திரும்பினார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் உடனடியாக சிறையில் அடைத்தனர். எனினும் மோசமான உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது சிறை தண்டனையை ஒரு ஆண்டாக குறைத்து அந்த நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் உத்தரவிட்டார்.


Next Story