இங்கிலாந்தில் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் ரெயில் சேவைகள் பாதிப்பு - பொதுமக்கள் அவதி


இங்கிலாந்தில் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் ரெயில் சேவைகள் பாதிப்பு - பொதுமக்கள் அவதி
x

பேச்சுவார்த்தையில் உடன்பாட்டை எட்ட முடியாததால், போராட்டத்தை தொடர உள்ளதாக தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் அமைப்புகள் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்தில் 5-ல் ஒரு பங்கு ரெயில்கள் மட்டுமே இயங்கி வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக ஸ்காட்லாந்து, வேல்ஸ், இங்கிலாந்தின் கிராமப் பகுதிகள் பலவற்றிலும் ரெயில் சேவை முடங்கியுள்ளது. அதே சமயம் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் நியாயமான உடன்பாட்டை எட்ட முடியாததால், தங்கள் போராட்டத்தை தொடர உள்ளதாக தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு தங்களது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லாவிடில் ஜனவரி மாத கடைசியில் வேல்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரியும் 2,600 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் தொழிற்சங்க அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


Next Story