பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி பலி - ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தார்


பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி பலி - ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தார்
x

பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தில் ராணுவ வீரரும் உயிரிழந்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துங்வா மாகாணம் டேங்க் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு ராணுவ வீரர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென ராணுவ வீரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராணுவ வீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவர் பல பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி அப்பாவி பொதுமக்களை கொன்றதற்காக ஏற்கனவே போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் அவரிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். இதற்கிடையே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story