உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க இங்கிலாந்து உறுதி


உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க இங்கிலாந்து உறுதி
x

ஜெலெனஸ்கி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பின் போது உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க உறுதியளிக்கப்பட்டது.

லண்டன்,

உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துவதற்காக மேற்கத்திய தலைவர்களை சமீப நாட்களாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்து வருகிறார்.

தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பதற்காக, ஜெலென்ஸ்கி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். இந்த சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது டுவிட்டரில், எனது நண்பர் திரு ரிஷி சுனக்கைச் சந்தித்து, கணிசமான பேச்சுவார்த்தைகளை நடத்த இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே ரஷியாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து அறிவித்திருந்தது.

இந்நிலையில் உக்ரைனின் பாதுகாப்பிற்கு உதவும் வகையிலும், போரின் போக்கை மாற்றும் முயற்சியாகவும், மேலும் நூற்றுக்கணக்கான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இங்கிலாந்து வழங்க இருப்பதாக உறுதியளித்துள்ளது.


Next Story