அமெரிக்கா: கணவருக்கு கத்தி குத்து; காரில் 3 குழந்தைகளுடன் ஏரிக்குள் பாய்ந்த மனைவி


அமெரிக்கா:  கணவருக்கு கத்தி குத்து; காரில் 3 குழந்தைகளுடன் ஏரிக்குள் பாய்ந்த மனைவி
x

ஒரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 2 குழந்தைகளும் குணமடைந்து சீராக உள்ளனர் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கர்ரோல்டன் பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென ஏரி ஒன்றிற்குள் பாய்ந்தது. இதுபற்றி காவல் துறைக்கு அவசரகால தகவல் சென்றது.

அதில் பேசிய நபர், அவருடைய மனைவி கத்தியால் குத்தி விட்டார் என கூறியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னரே, ஏரிக்குள் கார் பாய்ந்துள்ளது. இதுபற்றி லூயிஸ்வில்லே காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இதன்படி, குடும்ப சண்டையால் பெண் ஒருவர் அவருடைய கணவரை கத்தியால் குத்தி விட்டு, 8, 9 மற்றும் 12 வயதுடைய 3 குழந்தைகளுடன் சென்று காரை ஏரிக்குள் விட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதன்பின் மீட்பு குழுவினர் அவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் ஒரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 2 குழந்தைகளும் குணமடைந்து சீராக உள்ளனர் என டாக்டர்கள் கூறியுள்ளனர். காயமடைந்த கணவருக்கும் சிகிச்சை தொடர்ந்து வருகிறது.

இந்த சம்பவத்தில், அந்த பெண்ணை கைது செய்த போலீசார், தாக்குதலுக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story