சீனாவில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 11 பேர் உயிரிழப்பு


சீனாவில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 11 பேர் உயிரிழப்பு
x

விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளனர்.

பீஜிங்,

சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் ஜிங்சி நகரில் உள்ள மலைப்பகுதியில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள சிமிங் கிராமம் அருகே சென்றபோது வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி மலையில் இருந்து உருண்டு அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 11 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளனர். மேலும் சிலர் மாயமானதால் தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story