வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 9 May 2023 12:30 PM GMT (Updated: 9 May 2023 12:30 PM GMT)

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.

ஈசனையும், அவரை பற்றிக்கொண்டு முக்தி அடையும் வழியையும், அன்பே சிவமானவன் என்பதையும் பற்றி திருமூலரால் பாடப்பட்ட நூல்தான், திருமந்திரம். மூவாயிரம் பாடல்கள் அடங்கிய இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொருளானைக்

கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம்

புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே

பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.

விளக்கம்:-

சிவனை அவன் அருளால் உணர்ந்தேன். உலகில் திருக்கோவில்களில் உறையும் அந்த மெய்ப்பொருளை, என் மனதிற்குள் நான் கொண்டு வந்தேன். அந்த சிவபெருமான் திருவடிகளில் வேறுபாடின்றி ஒன்றினேன். ஒளி வடிவாகவும், ஒலி வடிவாகவும் தோன்றிய அந்தப் புனிதனைப் பணிந்தேன்.


Next Story