கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி + "||" + New Zealand innings victory in the Test against Bangladesh

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.
ஹாமில்டன்,

நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 234 ரன்களும், நியூசிலாந்து 715 ரன்களும் எடுத்தன. 481 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.


இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 103 ஓவர்களில் 429 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. ‘கன்னி’ சதத்தை எட்டிய சவும்யா சர்கார் 149 ரன்களும் (171 பந்து, 21 பவுண்டரி, 5 சிக்சர்), 4-வது சதத்தை பூர்த்தி செய்த பொறுப்பு கேப்டன் மக்முதுல்லா 146 ரன்களும் (229 பந்து, 21 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தது மட்டுமே வங்காளதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் ஆகும். வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டுகளும், டிம் சவுதி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.