டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனை படைத்த அஸ்வின் - ஜடேஜா கூட்டணி


டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனை படைத்த  அஸ்வின் - ஜடேஜா கூட்டணி
x

image courtesy; AFP

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி இதுவரை 6 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்த கூட்டணி மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜோடி என்ற மாபெரும் சாதனையை இந்த கூட்டணி படைத்துள்ளது.

அந்த பட்டியல்

1. அஸ்வின் - ஜடேஜா - 503 விக்கெட்டுகள் (50 டெஸ்ட்)

2. கும்ப்ளே - ஹர்பஜன் சிங் - 501 விக்கெட்டுகள் (54 டெஸ்ட்)

3. ஜாகீர் கான் - ஹர்பஜன் சிங் - 474 விக்கெட்டுகள் (59 டெஸ்ட்)


Next Story