ஆசிய கோப்பை; இறுதிப்போட்டி ஆரம்பம்..!!

image courtesy; twitter/@BCCI
மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இறுதிப்போட்டி ஆரம்பமானது.
கொழும்பு,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதை அடுத்து ஆட்டம் ஆரம்பமாகி உள்ளது. அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்கிறது.
Related Tags :
Next Story