பயிற்சியின்போது பறந்த பந்துகள்.. போட்டிக்கு முன்பே கொல்கத்தா அணியை மிரட்டும் தோனி


பயிற்சியின்போது பறந்த பந்துகள்.. போட்டிக்கு முன்பே கொல்கத்தா அணியை மிரட்டும் தோனி
x
தினத்தந்தி 8 April 2024 11:43 AM GMT (Updated: 8 April 2024 11:57 AM GMT)

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், வெளியூரில் நடைபெற்ற அடுத்த 2 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் சொந்த மண்ணில் நடைபெற உள்ள இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி போராட உள்ளது.

இந்த போட்டிக்காக சென்னை அணி வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயிற்சியின்போது எதிர்கொள்ளும் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிடும் எம்.எஸ்.தோனி போட்டிக்கு முன்பாகவே கொல்கத்தா அணிக்கு மிரட்டல் விடுக்கிறார். தோனி பயிற்சி மேற்கொள்வதை அவருடைய நெருங்கிய நண்பரும் முன்னாள் சி.எஸ்.கே. வீரருமான சுரேஷ் ரெய்னா நேரில் கண்டுகளித்தார்.

சென்னையில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் பேட்டிங் செய்ய களமிறங்காத எம்.எஸ். தோனி, சென்னை ரசிகர்கள் முன்னிலையில் இன்று களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story