சேப்பாக்கத்தில் சென்னை-டெல்லி இடையிலான ஆட்டம் - நாளை டிக்கெட் விற்பனை


சேப்பாக்கத்தில் சென்னை-டெல்லி இடையிலான ஆட்டம் - நாளை டிக்கெட் விற்பனை
x

சேப்பாக்கத்தில் நாளை காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 10-ந்தேதி மாலை 7.30 மணிக்கு நடக்கிறது.

இந்த போட்டிக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் வரும் 8-ந்தேதி(நாளை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகளை கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story