உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு


உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு
x
தினத்தந்தி 21 Oct 2023 8:09 AM GMT (Updated: 21 Oct 2023 8:13 AM GMT)

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

மும்பை,

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் சரண் அடைந்த இங்கிலாந்து அணி அடுத்த ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வதம் செய்தது. முந்தைய ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. இலங்கைக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 428 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா அடுத்த ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைத்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மழையால் பாதித்து 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

கடந்த அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துகான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

தென்னாபிரிக்க அணி பிளேயிங் 11: குயின்டன் டி காக்(கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி

இங்கிலாந்து அணி பிளேயிங் 11: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர்(கேப்டன் &கீப்பர்), டேவிட் வில்லி, அடில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ரீஸ் டாப்லி


Next Story