வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!


வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
x

image courtesy; ICC

இங்கிலாந்து அணி அடுத்தாக வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

லண்டன்,

நடப்பு சாம்பியனாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணி யாரும் எதிர்பாராத விதமாக லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் மூன்று 50 ஓவர் மற்றும் ஐந்து டி20 போட்டிகளுக்கான அணிகளை இங்கிலாந்து தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

இரண்டு அணிகளுக்கும் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களில் பட்லர் உட்பட 6 வீரர்களை மட்டுமே அணியில் சேர்த்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு;-

ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாக் க்ராலி, சாம் குர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஒல்லி போப், பில் சால்ட், ஜோஷ் டங்கு, ஜான் டர்னர்.

டி20 அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டைமல் மில்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ஜோஷ் டங்கு, ரீஸ் டோப்லி, ஜான் டூர் , கிறிஸ் வோக்ஸ்


Next Story