ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து எடுத்த முடிவு ஆச்சரியம் அளிக்கிறது - இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர்


ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து எடுத்த முடிவு ஆச்சரியம் அளிக்கிறது - இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர்
x

கிரேடிட்ஸ் : ANI

தினத்தந்தி 18 Jun 2023 12:04 PM IST (Updated: 18 Jun 2023 12:05 PM IST)
t-max-icont-min-icon

முதல் நாள் ஆட்டத்திலேயே டிக்ளேர் செய்தது ஆச்சர்யம் அளிப்பதாக இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் கருத்து தெரிவித்து உள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்ஹமில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் நாளில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவிந்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்ன் இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் நிபுணர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கரேத் சவுத்கேட், தனது வாழ்நாளில் இதுவரை கண்டிராத ஒன்று என்று கூறியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் ஒரு பெரிய கிரிக்கெட் ரசிகன், இந்த நேரத்தில் பார்க்க எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது.ஆஸ்திரேலியாவிடம் உலகத்தரம் வாய்ந்த வீர்கள் உள்ள நிலையில் இங்கிலாந்தின் இந்த முடிவு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது வாழ்நாளில் முதல் நாள் 393/8 என டிக்ளேர் செய்யும் முதல் அணி இங்கிலாந்து ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். இது ஒரு சுவாரசியமான முடிவாக இருக்கும், ஏனென்றால் இறுதியில் மக்கள் இங்கிலாந்தின் முடிவை பற்றி தீர்மானிப்பார்கள்" என்று அவர் கூறினார்.


Next Story