டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள் அடிக்கப்பட்ட முதல் தொடர்; உலக சாதனை படைத்த இந்தியா-இங்கிலாந்து


டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள் அடிக்கப்பட்ட முதல் தொடர்; உலக சாதனை படைத்த இந்தியா-இங்கிலாந்து
x

Image Courtesy: AFP

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

தர்மசாலா,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் பேஸ்பால் ஆட்டத்தை பயன்படுத்தி இந்திய அணியை வீழ்த்துவோம் என இங்கிலாந்து அணியினர் கூறி வந்தனர்.

ஆனால் இந்திய அணியினர் இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து டெஸ்ட் தொடரை கைப்பற்றினர். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் புதிய உலக சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 100 சிக்சர்கள் அடிக்கப்பட்ட முதல் தொடராக இந்த தொடர் அமைந்தது.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 102 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. அதில் இந்தியா 72 சிக்சர்களும், இங்கிலாந்து 30 சிக்சர்களும் அடித்துள்ளன. இந்தியா தரப்பில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் மட்டும் 26 சிக்சர்கள் விளாசி உள்ளார்.

இதற்கு முன் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 2023ம் ஆண்டின் ஆஷஸ் தொடரில் 74 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முறியடித்தது.


Next Story