பந்தை பார்த்து அதற்கேற்றார் போல் என்னுடைய ஷாட்களை விளையாடினேன் - சஷாங்க் சிங் பேட்டி


பந்தை பார்த்து அதற்கேற்றார் போல் என்னுடைய ஷாட்களை விளையாடினேன் - சஷாங்க் சிங் பேட்டி
x

Image Courtesy: @IPL

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் கேப்டன் கில் 89 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் சஷாங்க் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய சஷாங்க் சிங் 29 பந்தில் 61 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின் சஷாங்க் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது, இன்னும் மூழ்க முயற்சிக்கிறேன். இந்த விஷயங்களை நான் கனவாக பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போது எதார்த்தமாக அதை பார்ப்பது நன்றாக இருக்கிறது.

நான் கிரிக்கெட்டுக்கு தேவையான ஷாட்டுகளை விளையாடுகிறேன். பொதுவாக ஏழாவது இடத்தில் நான் பேட்டிங் செய்வேன். ஆனால் இன்று 5வது இடத்தில் பேட்டிங் செய்தேன். பிட்ச்சில் பவுன்ஸ் நன்றாக இருந்தது. அதில் இரு அணிகளும் 200 ரன்கள் அடித்ததால் பிட்ச் அருமையாகவே இருந்தது. எதிரணியின் சில பவுலர்கள் கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள். ஆனால் நான் அவர்களுடைய பெயரை பார்க்கவில்லை.

பந்தை பார்த்து அதற்கேற்றார் போல் என்னுடைய ஷாட்டை விளையாடினேன். கடந்த வருடம் ஐதராபாத் அணியில் அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இங்கே உள்ள அணி நிர்வாகமும் பயிற்சியாளர்களும் எனக்கு நிறைய ஆதரவை கொடுத்தனர். அதனால் நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் விளையாடினேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story