ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இந்திய அணியின் ஒரே தோல்வி கேப்டன் மட்டும்தான்- தினேஷ் கார்த்திக்


ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இந்திய அணியின் ஒரே தோல்வி கேப்டன் மட்டும்தான்- தினேஷ் கார்த்திக்
x
தினத்தந்தி 15 Jan 2024 2:55 PM IST (Updated: 15 Jan 2024 2:57 PM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

மும்பை,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த 2 போட்டிகளிலும் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் சிறப்பாகவே அமைந்தன. ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2 போட்டிகளிலும் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில் தற்போதைய இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா மட்டுமே கவலையளிக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் அவர் பேசியது பின்வருமாறு;- "இந்த தொடரில் இந்தியாவின் ஒரே தோல்வியாக கேப்டன் இருக்கிறார். 2 போட்டிகளிலும் டக் அவுட்டான அவர் அதைப்பற்றி பெரிய அளவில் கவலைப்படமாட்டார். ஏனெனில் நீண்ட காலம் கழித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடும் அவர் அணியின் கேப்டனாக உள்ளார். ஆனால் முதல் போட்டியில் ரன் அவுட்டான அவர் இந்த போட்டியில் பெரிய ஷாட் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார்" என்று கூறினார்.


Next Story