உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை இவ்வளவா..?


உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை இவ்வளவா..?
x

கோப்புப்படம்

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 9-ந்தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

நியூயார்க்,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 9-ந்தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.8¼ லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகிறது. குறைந்த விலை டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுதீர்ந்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்க டைமண்ட் கிளப் என்ற பெயரில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.16½ லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது. 'ஒரு டிக்கெட் இவ்வளவு விலைக்கு ஐ.சி.சி. விற்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

உலகக் கோப்பை போட்டி அமெரிக்காவில் நடப்பது கிரிக்கெட்டை அங்கு பிரபலப்படுத்துவதற்கும், ரசிகர்களை மகிழ்விப்பதற்கு மட்டுமே தவிர டிக்கெட் விற்பனை மூலம் பணத்தை அள்ளுவதற்காக அல்ல' என்று ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story