ஐ.பி.எல்; இந்த தவறால் தான் தோல்வியை சந்தித்தோம் - ஷிகர் தவான்


ஐ.பி.எல்; இந்த தவறால் தான் தோல்வியை சந்தித்தோம் - ஷிகர் தவான்
x

Image Courtesy: AFP

ஐ.பி.எல். தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு விராட் கோலியின் அரைசதத்தின் உதவியுடன் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் சாம் கர்ரன் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே விராட் கோலி கேட்ச் கொடுத்தார்.ஆனால் அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஜானி பேர்ஸ்டோ கோட்டை விட்டார்.

இந்நிலையில் விராட் கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவற விட்டதால் அதற்கு தண்டனையாக தோல்வி கிடைத்ததாக பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இது நல்ல போட்டியாக அமைந்தது. நாங்கள் போட்டியை மீண்டும் எடுத்து வந்தோம். ஆனால் கடைசியில் தோற்றோம். நாங்கள் 10 - 15 ரன்கள் குறைவாக எடுத்தோம். குறிப்பாக முதல் 6 ஓவர்களில் நான் சற்று மெதுவாக விளையாடினேன். அந்த 10 - 15 ரன்கள் போலவே, கேட்ச்சும் எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தியது. விராட் கோலி 70-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தார்.

நாங்கள் அவரைப் போன்ற ஒரு வீரரின் கேட்சை தவற விட்டோம். அதற்கான விலையை நாங்கள் கொடுத்தோம். ஒருவேளை நாங்கள் அந்த கேட்சை பிடித்திருந்தால் 2-வது பந்திலேயே போட்டி எங்கள் பக்கம் திரும்பியிருக்கலாம். ஆனால் அங்கேயே திருப்பு முனையை தவறவிட்டோம். அதற்கு விலையாக வெற்றியை நாங்கள் கொடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story