குஜராத்,லக்னோ அணிகளுக்கு எதிரான போட்டி: வரலாற்றை மாற்றி அமைக்குமா சென்னை, மும்பை அணிகள்...? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு...!


குஜராத்,லக்னோ அணிகளுக்கு எதிரான போட்டி: வரலாற்றை மாற்றி அமைக்குமா சென்னை, மும்பை அணிகள்...? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு...!
x

Image Courtesy: @IPL/@BCCI/@LucknowIPL

தினத்தந்தி 22 May 2023 5:01 AM GMT (Updated: 22 May 2023 6:16 AM GMT)

ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் சென்னை-குஜராத், மும்பை-லக்னோ அணிகள் மோத உள்ளன.

சென்னை,

ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இதில் சென்னையில் நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணியும், நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை-லக்னோ அணிகளும் மோத உள்ளன.

இந்நிலையில், இந்த இரு ஆட்டங்களிலாவது சாம்பியன் அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிகள் புதிய வரலாற்றை படைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். அந்த வரலாறு என்னவென்றால் குஜராத், லக்னோ அணிகள் கடந்த ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகின.

இதில் அறிமுகம் ஆன ஆண்டே ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஆண்டு கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆண்டும் இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில், சென்னை- குஜராத், மும்பை - லக்னோ அணிகள் தலா இதுவரை ஐபிஎல் தொடரில் 3 முறை மோதி உள்ளன. இந்த ஆட்டங்களில் சென்னை அணிக்கு எதிரான குஜராத்தும், மும்பை அணிக்கு எதிராக லக்னோவும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அந்த தோல்விகளுக்கு தக்க பதிலடி கொடுக்க பிளே ஆப் ஆட்டங்களில் குஜராத், லக்னோ அணிகளை சென்னை, மும்பை அணிகள் வீழ்த்துமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.


Next Story