பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய துணை கேப்டன் நியமனம்...!


பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய துணை கேப்டன் நியமனம்...!
x

image courtesy;AFP

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகி நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஷாஹின் அப்ரிடியின் பயணம் இந்த தொடரிலிருந்து தொடங்க உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய துணை கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது இந்த புதிய பயணம் நியூசிலாந்து தொடருடன் ஆரம்பமாக உள்ளது.

நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு;-

ஷாஹீன் அப்ரிடி (கேப்டன்), முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்), அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, அசம் கான், பாபர் ஆசம், பகார் ஜமான், ஹாரிஸ் ரவுப், முகமது நவாஸ், ஹசீபுல்லா கான், இப்திகார் அகமது, முகமது வாசிம், சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், உசாமா மிர், ஜமான் கான்.

1 More update

Next Story