உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு 338 ரன்கள் இலக்கு
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 337 ரன் எடுத்தது.
கொல்கத்தா,
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 44வது லீக் போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. தொடக்கம் முதல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் ரன் குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 337 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 84 ரன்னும், ஜோ ரூட் 60 ரன்னும், பேர்ஸ்டோ 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹரீஷ் ராஃப் 3 விக்கெட்டும், முகமது வாசிம். ஷாகீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
338 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. இந்த இலக்கை அந்த அணி 6 ஓவருக்குள் எட்டினால் அரையிறுதிக்கு செல்ல முடியும். அதனால், அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் கை நழுவிப்போனது. அதேநேரம் இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு எளிதாக தகுதி பெறும். இரு அணிகளும் தொடரில் இருந்து வெற்றியுடன் வெளியேறவே விரும்பும் என்பதால் போட்டி பரபரப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை