பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்


பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்
x

Image Courtesy: AFP

ஷாஹீன் ஷா அப்ரிடியை மேல் சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.


ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகினார். அவருக்கு வலது முழங்காளில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார். ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடாவிட்டாலும் அவர் அமீரகத்தில் தங்கள் அணியிருடன் தங்கி காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அவரை லண்டனுக்கு அனுப்பி உயர் சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நஜீபுல்லா சூம்ரோ கூறும்போது,

ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு தடையற்ற, அர்ப்பணிப்புள்ள முழங்கால் நிபுணர் பராமரிப்பு தேவைப்படுகிறது. உலகின் சிறந்த விளையாட்டு மருத்துவ வசதிகளை லண்டன் வழங்குகிறது. வீரரின் நலன் கருதி, அவரை அங்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்,'' என தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஷாஹீன் முழு உடற்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story