ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு...!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு...!
x

image courtesy; AFP

முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்த சர்பராஸ் அகமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது ரிஸ்வான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெர்த்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்த சர்பராஸ் அகமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது ரிஸ்வான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சில மாற்றங்களுடன் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு;- இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் ஆசம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா, ஷாஹீன் அப்ரிடி , ஹசன் அலி, மிர் ஹம்சா, அமீர் ஜமால் மற்றும் சஜித் கான்.


Next Story