சாய் சுதர்ஷன் அதிரடி: கோவை அணி 206 ரன்கள் குவிப்பு.!


சாய் சுதர்ஷன் அதிரடி: கோவை அணி 206 ரன்கள் குவிப்பு.!
x

image credit: @TNPremierLeague

கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்துள்ளது.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது சேலத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஷாரூக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுஜய் 31 ரன்களும், சுரேஷ் குமார் 29 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷன், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 41 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகிலேஷ் 34 ரன்களும், கேப்டன் ஷாருக் கான் 18 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்துள்ளது. திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக சரவனகுமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடி வருகிறது.


Next Story