தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: ஒரே நாளில் 16 விக்கெட் சரிந்தது


தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: ஒரே நாளில் 16 விக்கெட் சரிந்தது
x

தென்ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து 342 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 169 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது. ரேய்மான் ரீபெர் (62 ரன்) வீழ்ந்ததும் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் 69 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

தென்ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா 5 விக்கெட்டுகளை அள்ளினார். அடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 49 ரன்களுடன் தடுமாறியது. நேற்று ஒரே நாளில் 16 விக்கெட் சரிந்தது கவனிக்கத்தக்கது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.


Next Story