டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு


டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
x

Image Courtesy: ICC Twitter

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பிரிஸ்பேன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, தசுன் ஷனகா தலைமையிலான முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் (குரூப்1) மோதுகிறது. இந்த ஆட்டத்தில் தோற்கும் அணியின் அரைஇறுதி வாய்ப்பு அம்பேல் ஆகிவிடும் என்பதால் இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story