டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி


டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி
x

image courtesy: Windies Cricket twitter

நியூசிலாந்து அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

டிரினிடாட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 76 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்த நிலையில், அந்த அணியின் ரூதர்போர்ட் 39 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 40 ரன்களும் பின் ஆலன் 26 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.


Next Story