டி20 உலகக்கோப்பை; தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கம் தொடருமா...? - வங்காளதேசத்துடன் இன்று மோதல்


டி20 உலகக்கோப்பை; தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கம் தொடருமா...? - வங்காளதேசத்துடன் இன்று மோதல்
x

Image Courtesy: AFP

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, வங்காளதேசத்தை (டி பிரிவு) எதிர்கொள்கிறது.

மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா தனது முதல் இரு லீக் ஆட்டங்களில் முறையே இலங்கையை 77 ரன்னிலும், நெதர்லாந்தை 103 ரன்னிலும் சுருட்டியது. என்றாலும் அவ்விரு ஆட்டங்களில் போராடியே வெற்றி கண்டது. இன்றைய ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றை ஏறக்குறைய உறுதி செய்து விடும்.

அதே வேளையில் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேசம் தனது தொடக்க ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த ஆட்டத்தில் இலங்கையை 124 ரன்னில் சுருட்டிய வங்காளதேசம் இலக்கை 19-வது ஓவரில் எட்டிப்பிடித்தது.

நியூயார்க் ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆவதால் பேட்ஸ்மேன்கள் பந்தை கணித்து விளையாட முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இதுவும் குறைந்த ஸ்கோர் கொண்ட ஆட்டமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அனைத்து ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்காவே வெற்றி பெற்றுள்ளது. எனவே தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட வங்காளதேசம் பலமாக முயற்சிக்கும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.


Next Story