நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்...புதிய கேப்டன் தலைமையில் களம் இறங்கும் வங்காளதேசம்...!
நியூசிலாந்து அணி இந்த மாத இறுதியில் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
டாக்கா,
நியூசிலாந்து அணி இந்த மாத இறுதியில் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
உலகக்கோப்பைக்கு முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பின்னர் உலகக்கோப்பை தொடரை கணக்கில் கொண்டு டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்காளதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்பட்ட லிட்டன் தாஸ் சொந்த காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து ஓய்வு கேட்டுள்ளதால் ஷாண்டோ கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.