ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் விலகல்!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் விலகல்!
x

image courtesy; ICC

தினத்தந்தி 10 Dec 2023 5:32 PM IST (Updated: 10 Dec 2023 5:57 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடியது.

இந்த ஆட்டத்தின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது விலகியுள்ளார். முதலாவது டெஸ்டிற்கு அவருக்கு பதிலாக மாற்று வீரராக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அப்ரார் 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக காயத்திலிருந்து மீள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story