டி.என்.பி.எல். கிரிக்கெட்; திருச்சி வாரியர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதல்


டி.என்.பி.எல். கிரிக்கெட்;  திருச்சி வாரியர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதல்
x

இன்று நடைபெறும் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நெல்லை,

6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இந்த லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. திருச்சி அணி தனது இதுவரை ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. திருப்பூர் அணிக்கு இந்த தொடரில் இது முதல் போட்டியாகும்.


Next Story