டி.என்.பி.எல்: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு
x

image credit: @TNPremierLeague

டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது சேலத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஷாரூக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story