இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா


இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா
x

Image Courtesy: AFP

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை,

இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றியை அடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி ஏற்றம் கண்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி (59.52%) 2-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து (75%) முதல் இடத்தி உள்ளது. 3-வது இடத்தில் ஆஸ்திரேலியா (55%) உள்ளது.

இந்த பட்டியலில் 4 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (50%), பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), தென் ஆப்பிரிக்கா (25%), இங்கிலாந்து (21.87%), இலங்கை (0%) ஆகிய அணிகள் உள்ளன.


Next Story