முதல் 2 போட்டிகளில் விராட் கோலி ஆடாதது ஒருவகையில் நல்லதுதான்- ராகுல் டிராவிட்


முதல் 2 போட்டிகளில் விராட் கோலி ஆடாதது ஒருவகையில் நல்லதுதான்- ராகுல் டிராவிட்
x

விராட் கோலிக்கு பதிலாக ரஜத் பட்டிதார் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த அணிக்கு ரோகித் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் சீனியர் வீரரான விராட் கோலி இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரு போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. அவருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலியின் இந்த விலகல் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறுகையில் ;- 'விராட் கோலி போன்ற ஒரு தரமான வீரரை இந்திய அணி தற்போது இழந்துள்ளது சற்று பின்னடைவுதான். ஏனெனில் அவர் ஒரு அற்புதமான வீரர் . ஆனால் அவர் முதல் 2 போட்டிகளில் ஆடாததும் ஒருவகையில் நல்லதுதான். ஏனெனில் அவருக்கு பதிலாக வேறு யாரையாவது அந்த இடத்தில் பயன்படுத்தி அவர்களது செயல்பாட்டை முன்னேற்ற இந்த போட்டிகள் கொஞ்சம் உதவியாக இருக்கும். அந்த வகையில் விராட் கோலியின் இடத்தில் மற்றொரு வீரர் விளையாடி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்' என்றார்.


Next Story